

இலங்கையில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த நாட்டின் மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை சிறைகளில் தற்போது 529 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்த இலங்கை மனித உரிமை ஆணையம் அந்த நாட்டு அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மரண தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுளாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் பிரதிபா மகாநாமாஹீவா நிருபர்களிடம் கூறியபோது, மரண தண்டனைக் கைதிகள் மனரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் தண்டனையை ஆயுளாகக் குறைக்க வேண்டும் என்று அதிபர் ராஜபட்சேவிடம் பரிந்துரை அளித்துள்ளோம் என்றார்.
இலங்கையில் 1976 ஜூன் மாதத்துக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.