Published : 17 Jul 2014 10:36 AM
Last Updated : 17 Jul 2014 10:36 AM

சிறை வைத்துள்ள 219 மாணவிகளை விடுவியுங்கள்: நைஜீரியா தீவிரவாதிகளுக்கு மலாலா வேண்டுகோள்

மூன்று மாதங்களுக்கு முன் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள 219 பள்ளி மாணவிகளை விடுவிக்கும்படி நைஜீரியாவில் உள்ள போகோ ஹரம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண் கல்விக்காகவும் அவர்களது சுதந்திரத்துக்காகவும் போராடியதற்காக 2012ம் ஆண்டில் தலிபான்களால் சுடப்பட்டு தப்பித்தவர் மலாலா. அவருக்கு செவ்வாய்க்கிழமை 17 வது பிறந்த தினமாகும். இந்த பிறந்தநாளில் அவர் நைஜீரியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடத்தப்பட்டுள்ள 219 பள்ளி மாணவிகளையும் விடுவிக்கும்படி தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்துப் பேசுவதாக தன்னிடம் நைஜீரிய அதிபர் உறுதி அளித்துள்ளதாக மலாலா தெரிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளை பத்திரமாக அழைத்து வரவேண் டும் என்பதே எனது பிறந்த நாள் விருப்பம் என்றும் தெரிவித்திருக்கிறார் மலாலா. நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் ஏப்ரல் மாதத்தில் கடத்தினர்.

அவர்களுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார் மலாலா. ஆயுதங்களை வீசி எறியுங் கள், உங்களது சகோதரிகளை விடு தலை செய்யுங்கள். இந்தநாடு ஈன் றெடுத்த குழந்தைகள் அவர்கள். குற்றம் எதுவும் செய்யாதவர்கள். இஸ்லாம் பெயரை நீங்கள் தவறாக பயன்படுத்துகிறீர்கள், குரான் சகோதரத்துவத்தைத்தான் போதிக் கிறது. கொடூரங்களிலிருந்து பெண் களை காப்பாற்றுங்கள்.

திருமணம் செய்து கொள்ளும்படி பெண்களை யாரும் வற்புறுத்தக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் மலாலா. நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனா தனை மலாலா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட் டுள்ள மாணவிகளின் பெற்றோரை திங்கள்கிழமை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x