மாம்பழம் அனுப்பிய வங்கதேச பிரதமருக்கு அன்னாசி பழம் பரிசளித்த திரிபுரா முதல்வர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அகர்தலா: தனக்கு மாம்பழம் அனுப்பி வைத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அன்னாசி பழத்தை பரிசாக வழங்கி உள்ளார் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கடந்த ஜூன் 15-ம் தேதி 500 கிலோ மாம்பழங்களை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அன்னாசி பழங்களை மாணிக் சாஹா அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து திரிபுரா தோட்டக் கலை துறை இயக்குநர் பி.பி.ஜமாதியா கூறும்போது, “வங்க தேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம் அந்நாட்டு பிரதமருக்கு நல்லெண்ண அடிப்படையில் 980 கிலோ கீவ் வகை அன்னாசி பழங்களை பரிசாக வழங்கி உள்ளோம். இந்த பழங்களின் சுவை, வாசனை, அளவு ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in