

மூன்றாவது முறையும் பதவியில் தொடர்வதற்கான முயற்சியை கைவிட மாட்டேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார் இராக் பிரதமர் நூர் அல் மாலிகி.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:
பிரதமர் பதவி வேட்பாளராக என்னை முன்னிறுத்திக் கொள்வதை கை விடமாட்டேன். எனது தலைமை யிலான கூட்டணி ஏப்ரல் 30-ம் தேதி நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்றது. எனவே பிரதமரை தேர்வு செய்வதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. பிரதமர் யார் என்பதை இறுதியாக தேர்வு செய்ய நிபந்த னைகளை விதிக்க எதிர் தரப்பு குழுக் களுக்கு அதிகாரம் கிடையாது. இவ் வாறு மாலிகி தெரிவித்திருக்கிறார்.
இராக்கில் அரசு படைகளை வீழ்த்தி முன்னேறி பல இடங்களை கைப்பற்றி வருகின்றனர் அல் காய்தா ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள். இந் நிலையில் சொந்த மதப் பிரிவின ருக்கு ஆதரவாக இருப்பதாகவும் சர்வாதிகார போக்கில் செயல்படு வதாகவும் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் மாலிகி மீதும் குறை கூறப்படுகிறது.
அண்மையில் கூடிய நாடாளு மன்றம் புதிய சபாநாயகரை தேர்ந் தெடுக்க முடியாமல் போனது. இதற்கு காரணம் பல்வேறு கோஷ் டிகளாக எம்பிக்கள் பிரிந்து கிடப்பது தான். இந்த கோஷ்டிகள் மாலிகி பதவியில் நீடிப்பதை விரும்ப வில்லை. இதனால் சர்வதேச நாடு கள் மற்றும் நாட்டின் ஷியா பிரிவின் உயர் தலைவரின் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளார் மாலிகி.
இந்த சூழலுக்கு மத்தியில் பிரதமர் பதவிக்கு 3 வது முறையாக போட்டியிடும் முயற்சியை கைவிட மாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றம் அடுத்த செவ்வாய்க்கிழமை கூட உள்ளது. உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் இராக்கில் 5 மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளை தீவிரவாதிகள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.
தீவிரவாதிகளை வீழ்த்த அரசு படைகளுக்கு ஆதரவாக தோள் கொடுக்கும்படி ஷியா மத உயர் தலைவர் அயதுல்லா அலி அல் சிஸ் தானி விடுத்த வேண்டுகோள் மாலி கிக்கு ஆதரவாக பெரும்பான்மை ஷியா பிரிவினரை திருப்பி விட்டுள் ளது. சன்னி தீவிரவாதிகள் கைக்கு இராக் செல்வதை தடுக்கும் சக்தி மாலிகிக்கு தான் உள்ளது என்ற கண்ணோட்டமும் ஏற்பட்டுள்ளது.
தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் சாவு
இதனிடையே, பாக்தாதின் வடக்கே பாதுகாப்புப் படைகளின் நிலைகள் மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு வெடிக்கச் செய்ததில் 15 பேர் கொல் லப்பட்டனர். சமாரா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.