

சீனாவில் சின்ஜியாங் பகுதியில் சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் மத சிறுபான்மையினரான யூகுர் முஸ்லிம் இனத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை இரவில், கத்தி மற்றும் கோடாரிகளுடன் வந்த ஒரு கும்பல் காவல் நிலையத்தைச் சூறையாடியதோடு அரசு அலுவலகங்களுக்கும் தீ வைத்தது. பின்னர் அக்கும்பல் நகரத்துக்குள் நுழைந்து அங்கிருந்த மக்களைத் தாக்கியது.
அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திய போது, மோதல் ஏற்பட்டது. கும்பலில் பலரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். மோதலுக்குக் காரணம் என்ன வென்று உடனடியாகத் தெரியவில்லை. இந்த மோதலில் 32 பேர் பலியானதாக, உள்ளூர் யூகுர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஜின்ஜியாங்கில் மே மாதம் நடைபெற்ற தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு மார்ச் மாதம் குன்மிங் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் 29 பேர் கொல்லப் பட்டனர்.