Published : 09 Oct 2017 04:02 PM
Last Updated : 09 Oct 2017 04:02 PM

பொருளாதாரத்துக்கான நோபல்: அமெரிக்காவின் ரிச்சர்ட் ஹெச். தேலருக்கு அறிவிப்பு

பொருளாதாரத்துடன் உளவியலை ஒருங்கிணைத்த அமெரிக்காவின்  ரிச்சர்ட் ஹெச். தேலருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வருடம் தோறும் வழங்கப்படுகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று (திங்கட்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹெச். தேலருக்கு அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரத்துக்கான முடிவுகளை உளவியலுடன் ஒருங்கிணைத்து எப்படி தீர்வு காண்பது தொடர்பான ஆய்வினை  மேற்கொண்ட ஆய்வுக்கு பொருளாதாரத்துக்கான  நோபல் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் - உளவியல் தொடர்பான ரிச்சர்ட்டின்  ஆய்வுகள், சுய கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது,  தனிப்பட்ட முடிவுகள் பொருளாதார சந்தை விளைவுகளை எவ்வாறு சீரான முறையில்  பாதிக்கின்றன போன்றவற்றை விளக்குகின்றன.

இவரது கண்டுபிடிப்புகள் ’நடத்தையியல் பொருளாதாரம்’ என்ற துறையில் பெரிய பார்வைகளைத் திறந்து விட்டுள்ளது.  ‘பொருளாதார முகவர்கள் மனிதர்கள்,  எனவே பொருளாதார மாதிரிகள் இதனை தன்னகத்தே கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார் தேலர்.

72 வயதான ரிச்சர்ட் பொருளாதாரம் தொடர்பாக ஆறு புத்தங்களை இதுவரை  எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x