தனி நாடு கோரும் கேடலோனியா: எதிர்க்கும் ஸ்பெயின்

தனி நாடு கோரும் கேடலோனியா: எதிர்க்கும் ஸ்பெயின்
Updated on
1 min read

ஐரோப்பிய நாடான ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரி கேடலோனியாவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்பெய்னில், கேடலோனியா தன்னாட்சி உரிமை பெற்ற மாகாணம். தனிமொழி, தனி கலாச்சாரம் என்று ஸ்பெயினிடமிருந்து வேற்றுமைகளை கேடலோனியா கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கேடலோனியா தனி நாடு உரிமை கேட்டு போராடி வருகிறது.

ஆனால் இதற்கு ஸ்பெயின் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதற்கிடையில் தனி நாடு உரிமை கேட்டு கேடலோனியா தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என்று ஸ்பெயின் தலைவர்களும், அந்நாட்டு மன்னரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட இடங்களில் போலீஸார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை கேடலோனியா தலைவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது குறித்து ஸ்பெயின் மன்னர் பிலிப் தொலைக்காட்சியில் பேசும்போது, "கேட்டலோனியா தலைவர்கள் அரசியல் விதிமுறைகளை மீறி விட்டனர். அவர்களது முடிவு ஏற்றுகொள்ள முடியாதது. அவர்கள் நம்பக தன்மையை இழந்துவிட்டனர்” என்றார்

ஸ்பெயின் மன்னர் பிலிப் தெரிவித்த கருத்து குறித்து கேடலோனியா அதிபர் கேர்லஸ் புதன்கிழமை கூறும்போது,  ”நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளை சரியான முறையில் கையாள மன்னர் தவறிவிட்டார். மாற்று சிந்தனைக் கொண்ட லட்சக்கணக்கான கேடலோனியா மக்களை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். நீங்கள் கேடலோனியா மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறீர்கள். நம்மிடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வழியில் தீர்க்கப்பட வேண்டும். போலீஸாரால் அல்ல” என்றார்.

இந்த நிலையில்  திங்களன்று ஸ்பெயினிடமிருந்து கேடலோனியா பிரிகிறது என்று அந்நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in