உலகம்
எதிர்க்கட்சிகள் மீது ஒபாமா குற்றச்சாட்டு
அமெரிக்காவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் முறையான ஆவணங்கள் இன்றி குடியுரிமைக்காகக் காத்திருக்கும் நிலையில், விரிவான குடியேற்றச் சட்ட மசோதாவை நிறைவேற்ற விடாமல் தாமதம் செய்வதாக குடியரசுக் கட்சியினர் மீது அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது: குடியேற்ற அமலாக்க முறைகள் சார்ந்து நிர்வாக ரீதியாக வேகமான நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இப்பிரச்சினையைத் தீர்க்க அதுமட்டும் போதாது.
குடியேற்ற விதிமுறைகளில் கொண்டுவரப்படும் சீர்திருத்தம் நமது வர்த்தகம், தொழிலாளர்கள் மற்றும் ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் வலிமையான மாற்றத்தை ஏற்படுத்தும். அதனைச் சட்டமாகக் கொண்டு வர வேண்டும் என்றார்.
