வங்கதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

வங்கதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

Published on

டாக்கா: வங்கதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலில், "பங்களாதேஷின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபால்கஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை 10.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததாக இதுவரை தகவல் இல்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in