

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு மார்கெட்டில் அதிக சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 89 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஆப்கானின் கிழக்கே உள்ள பக்திக்கா பிராந்தியத்தில் உள்ள உர்குன் மாகாணத்தின் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள மார்க்கெட் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு, தற்கொலைப்படையினரால் நிகழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 89 பேர் பலியானதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அங்கிருந்த 20கிகும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானதாகவும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அம்மாகாண பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜாஹிர் அஸ்மி, "குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு ராணுவ ஹெலிக்காப்டர்கள் மற்றும் அவசர ஊர்தி வாகனங்கள் சென்றதாக தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.