Published : 26 Oct 2017 10:08 AM
Last Updated : 26 Oct 2017 10:08 AM

உலக மசாலா: வருமானம் கொட்டும் பாதங்கள்!

னடாவில் வசிக்கும் 32 வயது ஜெஸிகா குட், இன்ஸ்டாகிராம் மாடலாக இருக்கிறார். தன்னுடைய பாதங்களை விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து, விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.45.5 லட்சம் சம்பாதிக்கிறார்! “இப்படி வருமானத்துக்கு ஒரு வழி கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து. ஓய்வு நேரங்களில் வேலை வாய்ப்புச் செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் பெண் பாதம் மாடல்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டேன். பாதங்களுக்கு மாடல்களா என்று வியந்தேன். இதில் நல்ல வருமானம் இருப்பதாக நினைத்தேன். அதனால் என்னுடைய பாதங்களை தொழில்முறை ஒளிப்படக்காரர்களைக் கொண்டு விதவிதமாகப் படங்கள் எடுத்தேன். அவற்றை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டேன். பல நிறுவனங்களில் இருந்து என் படங்களைக் கேட்டு வந்தனர். நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன். என் கற்பனையைக் கலந்து பாதங்களைப் படம் எடுப்பதில் வித்தியாசம் காட்டினேன். தினமும் மூன்று படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன். அவற்றைப் பார்ப்பவர்கள் உடடியாக தொடர்புகொள்வார்கள். சில படங்களுக்கு அதிக அளவில் போட்டி இருக்கும். அப்போது விலையை அதிகமாகச் சொன்னாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பாத மருத்துவம், காலணி தொடர்பான வியாபாரங்களுக்கு இந்தப் படங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் என்னை 12 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இன்று என்னுடைய ஆண்டு வருமானம் ரூ.45.5 லட்சம். நானே இவ்வளவு சம்பாதிப்பேன் என்று எதிர்பார்த்ததில்லை. என் வாழ்க்கையே இப்போது மாறிவிட்டது” என்கிறார் ஜெஸிகா.

வருமானம் கொட்டும் பாதங்கள்!

மெரிக்காவின் கென்டகி பகுதியைச் சேர்ந்த 7 வயது வயாட் ஷா, ஒருநாள் இரவு தூங்க ஆரம்பித்து 11 நாட்களுக்குப் பிறகு கண் விழித்திருக்கிறான். “தன் அத்தையின் திருமண விருந்தில் மகிழ்ச்சியாக நடனமாடினான். நன்றாகச் சாப்பிட்டான். வீட்டுக்கு வந்தவுடன் தூங்கிவிட்டான். மறுநாள் திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக எழுப்பினால் எழுந்திருக்கவே இல்லை. களைப்பில் தூங்குகிறான் என்றுதான் நினைத்தோம். சிறிது நேரம் கழித்து எழுப்பியபோதும் திரும்பிப் படுத்துக்கொண்டான். எவ்வளவோ சொல்லியும் கண்களைக் கூட திறக்கவில்லை. அதனால் குழந்தைக்கு ஏதோ பிரச்சினை என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவப் பரிசோதனைகளில் எல்லாம் எந்தப் பிரச்சினையும் தெரியவில்லை. மர்மமான தூக்கத்துக்குக் காரணம் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வைரஸ், பாக்டீரியா பாதிப்பாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். வயாட் தூங்குவதற்கு முன்பு வயிறும் தலையும் வலிப்பதாகச் சொன்னான் என்பதை நினைவூட்டினேன். மூளையில் ஏற்பட்ட திடீர் மின் அதிர்ச்சியால் கூட இப்படி தொடர்ச்சியாகத் தூங்குவதற்கான சாத்தியம் இருப்பதாகச் சொல்லி, மருத்துவம் செய்ய ஆரம்பித்தனர். 11 நாட்களுக்குப் பிறகு வயாட் கண் விழித்தான். தூக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டாலும் அவனால் சரியாகப் பேச முடியவில்லை. தானாக நடக்க முடியவில்லை. நாளுக்கு நாள் அவன் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் முற்றிலும் குணமாவான் என்று நம்புகிறோம்” என்கிறார் வயாட்டின் அம்மா.

மர்மமான தூக்கம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x