கண்காட்சியின்போது பராமரிப்பாளரை தாக்கிய முதலை

கண்காட்சியின்போது பராமரிப்பாளரை தாக்கிய முதலை
Updated on
1 min read

முதலைகளுக்கு உணவு வழங் கும் கண்காட்சியின்போது, பராமரிப் பாளரை முதலை தாக்கியது. ஆஸ்திரேலியா ஷோல்ஹேவன் மிருகக்காட்சி சாலையில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மிருகக்காட்சி சாலையில் முதலைகளுக்கு உணவு வழங்கு வதைப் பார்க்க, பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். ட்ரென்ட் பர்டன் என்னும் பராமரிப்பாளர் கைகளில் இறைச்சியை வைத்துக்கொண்டு முதலைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது 12 அடி நீள முதலை ஒன்று திடீரென்று பாய்ந்து அவரின் கைகள் இரண்டை யும் வாயில் கவ்வியது. ட்ரென்ட் பர்டன் சுதாரித்துக்கொள்ளும் முன்பு, முதலை அவரை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

நிமிட நேர போராட்டத்திற்குப் பிறகு முதலையின் பிடியில் இருந்து அவர் மீண்டார். அவரின் கைகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரின் உயிருக்கும் உடலுக்கும் எந்த பாதிப்புகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் பார்வை யாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதுகுறித்து மிருகக்காட்சி சாலை உரிமையாளர் நிக் ஷில்கோ கூறும் போது, "முதலைகளைக் கையாளு வதில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் பர்டன். இந்தத் தாக்குதல் எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. எங்கே, எப்படி தவறு நடந்தது என்பதைப் பற்றி விசாரிக்க உள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in