

வங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கதேச போலீஸார் தரப்பில், ”மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுடன் வந்த படகு வங்கதேசதிலுள்ள ஷா போரிர் தீவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் பலியாகினர். படகில் மொத்தம் 35 பேர் பயணம் செய்துள்ளனர். படகில் கூடுதல் நபர்கள் ஏற்றப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன" என்றார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாத்தில் மியான்மர் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு இடப்பெயர்ந்தனர்.
இதுவரை மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு மியான்மரிலிருந்து பிற நாடுகளுக்கு பயணிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் படகு கவிழ்ப்பு போன்றவற்றில் சிக்கி பலியாகி வருகின்றன.
முன்னதாக செப்டம்பர் மியான்மரிலிருந்து வங்கதேச வந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதில் 46 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.