

புரட்சியாளரும், கியூபா புரட்சிக்கு வலது கரமாக செயல்பட்டவருமான சே குவேராவின் நினைவுத் தினத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.
உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) புரட்சியாளர் சேகுவிராவின் 50-வது நினைவுத் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "சேகுவிராவின் 50வது நினைவு தினத்தையொட்டி கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை 50,000க்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும் சேகுவேராவுடன் போர்களத்தில் பயணித்தவர்களும் கலந்து கொண்டார்.
நினைவு தினத்தில் கலந்து கொண்ட கியூபா துணை அதிபர் மிகுல் டைஸ் கேனல் பேசும்போது, சே இறக்கவில்லை. இளைய தலைமுறையினர் சேவை தங்களது முன் உதாரணமாக அங்கீகரித்துள்ளனர். சே தற்போது உலகெங்கிலுள்ள அடையாளமாக மாறி இருக்கிறார்"என்றார்