பனாமா ஊழலை வெளிக் கொண்டுவந்த பெண் பத்திரிகையாளர் குண்டுவெடிப்பில் பலி

பனாமா ஊழலை வெளிக் கொண்டுவந்த பெண் பத்திரிகையாளர் குண்டுவெடிப்பில் பலி
Updated on
1 min read

பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும் மால்டா நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கலிஸியா கார் குண்டுவெடிப்பில் பலியானார்.

பனாமா நாட்டில் உள்ள சட்ட அமைப்பு ஒன்று உலகளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள், வெளிநாடுகளில் சொத்துக்களைக் குவித்தவர்களின் விவரங்களை வெளியிட்டது.

இதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட உலகத் தொழிலதிபர்கள் பலர்  வெவ்வேறு நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு அம்பலமானது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்களில் பத்திரிகையாளர் கலிஸியாவும் ஒருவர்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் கலிஸியா திங்கட்கிழமையன்று வல்லெட்டா நகரில் அவரது வீட்டின் அருகே காரில் சென்ற போது காரிலிருந்த குண்டு வெடித்து பலியானார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கலிஸியா மரணம் குறித்து மாத்திஸ் நாட்டின் பிரதமர்  மஸ்கட் கூறும்பொது, இது காட்டுமிரண்டித்தனமாக தாக்குதல். கருத்துச் சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அரசியல் ரிதியாக கடுமையாக விமர்சித்தவர்களில் கலிசியாவும் ஒருவர் என்றார்.

இது ஒரு அரசியல் கொலை என்று மால்டாவின் எதிர்க்  கட்சித் தலைவர் அட்ரைன் டிலியா கூறியுள்ளார்.

கலிஸியா அரசியல் ரீதியாக பல கட்டுரைகளை தன்னுடைய வலைப்பக்கங்களில் எழுதி வந்தார். இதன் காரணமாக கலிஸியாவுக்கு பல அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் இருந்தன இந்த நிலையில் கலிஸியா கார் குண்டு வெடிப்பில் பலியானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in