Last Updated : 19 Nov, 2014 10:24 AM

 

Published : 19 Nov 2014 10:24 AM
Last Updated : 19 Nov 2014 10:24 AM

பெங்களூருவில் 22-ம் தேதி முத்தப் போராட்டம்: இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கொச்சி, சென்னையை தொடர்ந்து பெங்களூருவிலும் வரும் 22-ம் தேதி முத்தப் போராட்டம் நடை பெறுகிறது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்தப் போராட் டத்துக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளத்தில் கடந்த மாதம் முத்த மிட்டுக்கொண்ட காதலர்கள் மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து கடந்த 2-ம் தேதி கொச்சியில் ‘அன்பின் முத்தம்' என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், இளைஞர்களிடையே ஆதரவு பெருகியது. எனவே கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் முத்தப்போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் முத்தப்போராட்டம் நடத்த மனித உரிமை ஆர்வலர் ரெய்சிடா தனஞ்சே காவல்துறையிடம் அனுமதி கேட்டார். பல் வேறு காரணங்களால் அனுமதி தரப்பட வில்லை. எனவே மனித உரிமை ஆர்வலர்கள் கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜை சந்தித்து பேசினர். அமைச்சரின் அனுமதியை தொடர்ந்து வரும் 22-ம் போராட்டம் தேதி நடைபெற உள்ளது.

கையை வெட்டுவோம்

இதனிடையே பெங்களூருவில் முத்தப் போராட்டம் நடத்துவதற்கு பாஜக இளைஞர் அணி, சிவசேனா, ராம சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், ஜெய் கர்நாடகா, கன்னடா ரக்ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஸ்ரீராம சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறும்போது, “கர்நாடகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பள்ளிக் குழந்தை களும் பாதிக்கப்படுகின்றனர். இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கும் அவ மானத்தை ஏற்படுத்தும் இந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்றார்.

மனித உரிமைக்கான போராட்டம்

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ரெய்சிடா தனஞ்சே கூறும் போது, “முத்தாலிக் போன்ற வர்களின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். சட்டத் துக்கு உட்பட்டு போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இருக்கிறது. இதை யாராலும் தடுக்க முடியாது.

கலாச்சார காவலர்களாக காட்டிக் கொள்ளும் இந்த அடிப்படைவாதிகள் தான் உண்மையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் என்று பெண்களுக்கு எதிரான ஒடுக்குறையை முன்னெடுக் கிறார்கள். காதலர்களை தாக்குகிறார் கள். கவுரவ கொலைகளை செய் கிறார்கள்.

முத்தம் என்பது அன்பின் மொழி. அது தனி மனித உரிமை சார்ந்தது. அதை நிலைநாட்டுவதற்கே இந்தப் போராட்டம். எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட் டோர் இதில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x