Published : 02 Sep 2014 08:59 AM
Last Updated : 02 Sep 2014 08:59 AM
பெங்களூர் மாநகராட்சியின் ஒரு பிரதான சாலைக்கு கன்னட கிராமியக் கலைஞர் கரீம் கானின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் செய்தி படித்தேன். சமீபத்தில் மறைந்த கன்னட முதுபெரும் படைப்பாளியான யு. ஆர். அனந்தமூர்த்தியின் மறைவையொட்டி கர்நாடக அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டித்தது குறிப்பிடத் தக்கது.
இது நாமும் பின்பற்றக்கூடிய செயல். தமிழ்நாடெங்கும் கிராமியக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கலையும் அவர்களுக்குப் பின் மறைந்துபோகும் சூழலே இங்குள்ளது. அந்தக் கலைகளைப் பாதுகாப்பதோடு, அந்தக் கலைஞர்களுக்கும் உரிய கவுரவம் அளிக்க வேண்டும். மக்கள் சமூகத்தின் உன்னத ஆன்மாக்கள் கலையும் கலைஞர்களும்தான். அவர்கள் போற்றுவிக்கப்பட வேண்டும்.
- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.