Published : 08 Sep 2014 07:05 PM
Last Updated : 08 Sep 2014 07:05 PM

கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழித்து விடும்: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர்.

இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் கடவுள் துகளில் கவலைக்குரிய அம்சம் ஒன்று உள்ளது. அதாவது 100 பில்லியன் கிகா-எலக்ட்ரான் - வோல்ட்டிற்கும் அதிகமான ஆற்றலில் அது அதிநிலைத்தன்மை பெறலாம்.

இதன் பொருள் என்னவெனில் பிரபஞ்சம் பேரழிவு வெற்றிட சீர்கேடு என்ற நிகழ்வுக்கு ஆட்பட நேரிடலாம், காரணம் உண்மையான வெற்றிடக் குமிழ் ஒளியின் வேகத்தில் விரிவாக்கம் பெறும்.

இத்தகைய நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அது வருவதை நம்மால் பார்க்க முடியாது.

இத்தகைய நிகழ்வு என்ற பேரழிவு அண்மை எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்றாலும், அதி ஆற்றலில் ஹிக்ஸ் என்ற அந்தக் கடவுள் துகள் நிலைகுலையும் தன்மை உள்ளது என்ற அபாயத்தை அவ்வளவு எளிதாக நாம் மறந்து விடவோ, அலட்சியம் காட்டவோ முடியாத விஷயம்.

என்று ஸ்டார்மஸ் என்ற புதிய புத்தகத்திற்கு அவர் அளித்துள்ள முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

செர்னில் விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய பௌதீக ஆராய்ச்சிக் கூடத்தில் 2012ஆம் ஆண்டு ஹிக்ஸ் பாஸன் என்ற இந்த கடவுள் துகளைக் கண்டுபிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x