Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM

பிரிட்டன் எம்.பி.யாக இந்தியர் நியமனம்

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையான, பிரபுக்கள் அவையின் உறுப்பினராக, இந்திய வம்சாவளி நகைக்கடை அதிபர் ரன்பீர் சிங் சூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபுக்கள் அவைக்கு 20 புதிய உறுப்பினர்களை பிரதமர் டேவிட் கேமரூன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதில் ரன்பீர் சிங் சூரியும் ஒருவர். பிரிட்டன் அரசியலில் ஆசிய நாட்டவர்களை ஊக்குவிப்பதற்காக ‘பிரிட்டிஷ் ஏசியன் கன்சர்வேட்டிவ் லிங்க்’ என்ற அமைப்பை 1998-ல் நிறுவியவர் ரன்பீர் சிங் சூரி.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, சூரி தனிப்பட்ட முறையிலும் தனது நிறுவனங்கள் வாயிலாகவும் ரூ. 3 கோடியே 22 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். அவரது நியமனத்துக்கு இதுவும் காரணமாக கூறப்படுகிறது. பிரபுக்கள் அவை சட்டம் 1999-ன் படி பரம்பரை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய 20 உறுப்பினர்கள் நியமனம் மூலம் பிரபுக்கள் அவையின் பலம் 850 ஆக உயர்ந்துள்ளது. இந்த சட்டத்துக்குப் பிறகு உறுப்பினர்கள் எண்ணிக்கை இதுவே அதிகபட்ச அளவாகும். உலகின் பிற நாடுகளில் உள்ள மேலவையுடன் ஒப்பிடுகையில், சீனாவுக்குப் பிறகு அதிக உறுப்பினர்களை பிரிட்டனின் பிரபுக்கள் அவை கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய நியமனம் மூலம் பிரபுக்கள் அவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதாக பிரிட்டனில் விமர் சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x