Published : 09 Jul 2014 11:15 AM
Last Updated : 09 Jul 2014 11:15 AM

அட்சயா காப்பகத்தில் தங்கியிருப்போரை விடுவிக்க மறுப்பு: மீண்டும் பரிசோதிக்க உயர் நீதிமன்றம் யோசனை

மதுரை அட்சயா காப்பக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் முத்துராணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காப்பகத்தில் இருந்து 221 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜூலை 5-ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் காப்பகத்தில் இருந்து யாரையும் விடுவிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் ஆணையர் டி.கீதா, காப்பகத்தில் இருந்து 221 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் யாரையும் விடுவிக்கவில்லை. அவர்கள் நல்ல மனநிலையில் உள்ளனர். மருத்துவக்குழு அவர்களைப் பரிசோதித்து அவர்கள் வெளியே செல்லலாம் என கூறியுள்ளது என்றார்.

காப்பக வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன், மருத்துவக் குழுவி னர் காப்பகத்தில் தங்கியிருப்ப வர்களை சரியாக ஆய்வு செய்யவில்லை. ஒவ்வொருவரை யும் 2, 3 நிமிடங்கள் மட்டுமே ஆய்வு செய்துள்ளனர். வீடியோ பதிவு செய்யவில்லை. காப்பகம் முறையான அனுமதி பெற்று சிறப்பாக செயல்படுகிறது. மனநலம் பாதித்தவர்கள், வாழ்நாளில் இறுதி கட்டத்தில் உள்ளவர்கள் காப்பகத்தில் நிம்மதியாக வாழ்கின்றனர். இவர்களில் பலர் போலீஸாரால் காப்பகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள். காப்பகத்துக்கு நீதிபதி நேரில் வந்து இந்த வழக்கில் முடிவெடுக்க வேண்டும். பேச முடியாத ஒருவர் முகவரி தெரிவித்ததாக அறிக்கையில் கூறியுள்ளனர். வழக்கறிஞர் ஆணையரின் ஆய்வு அறிக்கை சரியல்ல என்றார். இதற்கு வழக்கறிஞர் ஆணையர் ஆட்சேபம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் வெளியே எங்கே செல்வார்கள், யாரிடம் செல்வார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. வட மாநிலங்களைச் சேர்ந்தவர் களும் உள்ளனர். அவர்கள் தெரிவித்த முகவரி குறித்தும், அந்த முகவரியில் உறவினர்கள் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். 2, 3 நிமிடங்கள் மட்டுமே பரிசோதிக் கப்பட்டதாக காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காப்பகத்தில் இருப்பவர்கள் அவர்களாகவே சிந்திக்கும் திறனுடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களை முழுமை யாக பரிசோதிக்க வேண்டும். அவர்களை வெளியே அனுப்பும் பட்சத்தில் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவற்றையும் ஆய்வு செய்து ஒருங்கிணைந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும். காப்பகம் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்த போலீஸ் விசாரணைக்கும் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கும் தொடர்பு இல்லை என்றனர்.

பின்னர் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி கள், அன்று காப்பகத்தில் தங்கியிருப்பவர்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறினர்.

முன்னதாக இந்த வழக்கில் தங்களை சேர்க்கக் கோரி காப்புக்காவல் மரணம் மற்றும் சித்திரவதைக்கு எதிராக பிரச்சார இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x