Published : 02 Jul 2022 10:18 AM
Last Updated : 02 Jul 2022 10:18 AM

போட்டித்தேர்வு தொடர் 25: மனிதநேயத்தை வளர்க்கும் அறிவியல் மனப்பான்மை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 25 -

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி ஆகிய இரண்டும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களிடம் இருந்து இந்தியாமற்றும் உலக அளவில் அறிவியல், அறிவியல் வளர்ச்சி பற்றிய சிலஅடிப்படை அறிவை எதிர்பார்க்கின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51A-ன் கீழ் ‘அறிவியல் மனப்பான்மையானது, மனிதநேயம் மற்றும் விசாரணை உணர்வை வளர்ப்பது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அறிவியல் வளர்ச்சிக்கான அமைப்புகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், விவசாயம், விவசாயிகள் நல அமைச்சகம், அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம், காலநிலைமாற்றம் அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத் துறை, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சிகவுன்சில், புவி அறிவியல் அமைச்சகம், தொலைத் தொடர்பு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை நாட்டின் அறிவியல் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆதார் என்பது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள திட்டமாகும், இது பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை அடிப்படையிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குகிறது. இது நகல் மற்றும் போலி அடையாளங்களை நீக்குகிறது. பல்வேறு சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கான அடையாள உள்கட்டமைப்பை வழங்குகிறது.

சைபர் பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையம் (National Centre of Excellence for Cybersecurity Technology Development) என்பது மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் Data Security Council of India ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியாகும். இது நாட்டில் இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும்தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், துரிதப்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உருவாக்குகிறது. இந்த மையம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ளது.

குவான்டம் கம்ப்யூட்டிங்

குவான்டம் கம்ப்யூட்டிங்கில் மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு சிறந்த வன்பொருளை வடிவமைக்க உதவுவதற்கும், குவான்டம் கம்ப்யூட்டிங் அல்காரிதம்கள்/ நிரல்கள் மற்றும் பயிற்சியை எளிதாக்குவதற்கும் ஒரு ‘குவான்டம் கம்ப்யூட்டர் சிமுலேட்டர்’ உருவாக்கப்பட்டுள்ளது. பரம் ஷவாக் மற்றும் பரம் சித்தி போன்ற ஹெச்பிசி உள்கட்டமைப்பில் சிமுலேட்டர் போர்ட் செய்யப்பட்டுள்ளது.

(PARAM Siddhi) பரம் சித்தி- 210 AI Petaflops-ன் AI சூப்பர் கம்ப்யூட்டர்: இது C-DAC அமைப்பால் உருவாக்கப்பட்டது. இந்த அதிநவீன பெரிய அளவிலான HPC-AI அளவிடக்கூடிய உள்கட்டமைப்பு, அறிவியல் மற்றும் பொறியியலில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். ‘பரம் சித்தி – AI’ சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும். அமெரிக்காவில் சூப்பர் கம்ப்யூட்டிங் கான்பரன்ஸ் 2020-ல் அறிவிக்கப்பட்ட 'TOP500 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் இது 62-வது இடத்தில் உள்ளது.

AarogyaSetu: இது அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக 2020 ஏப்ரல் 2-ம்தேதி இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் செயலி. இது ‘கான்டாக்ட் டிரேசிங்’ முறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. கரோனா பரவலை கண்டறிந்து, கண்காணித்து, கட்டுப்படுத்த அரசுக்கு உதவுகிறது.

ஜிஎஸ்டி பிரைம்: ஜிஎஸ்டி-பிரைம் என்பது வரி நிர்வாகிகள் தங்கள் அதிகார வரம்புக்குள் வரி வசூல் மற்றும் இணக்கத்தை பகுப்பாய்வு செய்து கண்காணிக்க உதவுகிறது.

உலகளாவிய குறியீடுகள்: மின்-அரசு வளர்ச்சிக் குறியீடு (E-Government Development Index) ஐ.நா. உறுப்பு நாடுகளின் மின்-அரசு வளர்ச்சியின் நிலையைஅளிக்கிறது. ஒரு நாட்டில் இணையதள மேம்பாட்டு முறைகளின் மதிப்பீட்டுடன், மின்-அரசு மேம்பாட்டுக் குறியீடு, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி நிலைகள் போன்ற அணுகல் பண்புகளை உள்ளடக்கியது. ஒரு நாடுஅதன் மக்களை அணுகுவதற்கும், இணைப்பதற்கும் எவ்வாறு தகவல்தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.

வாகன இருப்பிட கண்காணிப்பு அமைப்பு (Vehicle Location Tracking Systems): இது வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு சாதனங்களின் உதவியுடன் பொது வாகனங்களைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவான சேவை மையங்கள் (CSC): உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சேவை வழங்கல் வலையமைப்பாகும், கிராமப் பஞ்சாயத்து மற்றும் தொகுதி நிலை வரையிலான கிராமப்புறங்களில் பரவலான விநியோக நெட்வொர்க்கை கொண்டுள்ளது. இதன்மூலம் பிராட்பேண்ட் இணைப்புடன் கூடிய கியோஸ்க்குகள் மக்களுக்கு பல்வேறு அரசுகள், தனியார் மற்றும்சமூக சேவைகளை வழங்குகிறது.

பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சர்தா அபியான் (PMGDISHA): மார்ச் 2022க்குள் 6 கோடி கிராமப்புற குடும்பங்களை (ஒரு வீட்டுக்கு ஒருவர்) உள்ளடக்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவை வழங்குவதை PMDISHA நோக்கமாக கொண்டுள்ளது.

(அடுத்த பகுதி நாளை வரும்)

வீ.நந்தகுமார்ஐஆர்எஸ், வருமான வரித் துறை கூடுதல் ஆணையர்

போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x