Published : 25 Jun 2022 08:07 AM
Last Updated : 25 Jun 2022 08:07 AM
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 23 -
உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகையில் 11% இந்தியாவில் உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்.
இருப்பினும், திட்டமிடப்படாத நகரமயமாக்கல் நமது நகரங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. நகர்ப்புற திட்டமிடல் என்பது நகரங்கள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான அடித்தளமாகும்.
2005-14-ல் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பிக்கத்தக்க பணியை (JNNURM) செயல்படுத்தப்படுவது உட்பட, விரைவான நகர்ப்புற மாற்றங்களுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மாற்றங்களுக்கான திட்டங்கள்
புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் மிஷன், ஸ்மார்ட் சிட்டி மிஷன், ஸ்வச் பாரத் மிஷன், பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் பெருக்குதல் யோஜனா, புதிய நகர்ப்புற பணிகளைத் தொடங்குவது தொடர்பாக மாநில மற்றும் நகர அரசாங்கங்களுடன் ஒராண்டுக்கான பங்குதாரர் ஆலோசனைகள் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (அர்பன்) திட்டம் 2015 ஜூன் 25-ல் தொடங்கப்பட்டது, நகர்ப்புற வீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2022-க்குள் தகுதியுள்ள நகர்ப்புற குடும்பங்களுக்கு வீட்டை உறுதி செய்வது.
புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் மிஷன் திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது மற்றும் கழிவுநீர் இணைப்பை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.
பசுமை மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட திறந்தவெளிகளை (உதாரணம்: பூங்காக்கள்) மேம்படுத்துவதன் மூலம், நகரங்களின் மதிப்பை அதிகரிக்க முடியும். பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதன் மூலம் மாசுபாட்டைக் குறைக்கவும் அல்லது மோட்டார் அல்லாத போக்குவரத்து வசதிகளை உருவாக்கவும் முடியும். (உதாரணம்: நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல்).
இந்த முடிவுகள் அனைத்தும் குடிமக்களால், குறிப்பாக பெண்களால் மதிப்பிடப்படுகின்றன. மேலும், குறிகாட்டிகள் மற்றும் தரநிலைகள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் சேவை நிலை அளவுகோல் வடிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அம்ருத் திட்டத்தின் முக்கியக் கூறுகள், திறன் மேம்பாடு, சீர்திருத்தம், தண்ணீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, வெள்ள வடிகால், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பசுமையான இடங்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துதல் ஆகும்.
அம்ருத் 2.0 திட்டம் அக்டோபர் 2021-ல் தொடங்கப்பட்டது, தண்ணீர் பாதுகாப்பு மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர்வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்துக்கு மத்தியப் பங்கான ரூ.76,760 கோடி உட்பட அம்ருத் 2.0-க்கான மொத்த செலவு 2,77,000 கோடி.
2014 அக்டோபர் 2-ம் தேதி, இந்தியாவை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாக மாற்றும் வகையில், நகர்ப்புறங்களில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் தொடங்கப்பட்டது.
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டம் (தேசிய நகர்ப்புறவாழ்வாதார இயக்கம்) முக்கியமான மற்றொரு திட்டமாகும். வலுவானசமூக நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், நகர்ப்புற வறுமையைப் போக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறன் பயிற்சி, சுயவேலைவாய்ப்புக்கான மலிவு கடன், தெருவோர வியாபாரிகளுக்கு ஆதரவு மற்றும் நகர்ப்புற வீடற்றவர்களுக்கு தங்குமிடங்கள் வழங்கவும் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
2015 ஜூன் மாதம் ஸ்மார்ட் சிட்டி மிஷன் தொடங்கப்பட்டது. இது நகர்ப்புற மறுமலர்ச்சிக்கான தொலைநோக்கு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் 40 சதவீத மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாழ்விட மாநாடுகள்
மனிதக் குடியேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் முதல் மாநாடு Habitat-I (வாழ்விடம்) ஆகும். இது 1976-ல் கனடாவின் வான்கூவரில் நடந்தது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை வாழ்விட மாநாட்டைக் கூட்டியது.
1978-ல் ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியேற்றத் திட்டத்தை (UN-Habitat) உருவாக்குவதற்கான அடித்தளத்தை Habitat-I வழங்கியது.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியின் இஸ்தான்புல்லில் 1996 ஜூன் மாதம் நடைபெற்ற Habitat-II மாநாடு சிறந்த மனிதக் குடியேற்றங்களை மீண்டும் உறுதிப்படுத்தின.
2001-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலக நகர்ப்புற மன்றத்தை நிறுவியது. விரைவான நகரமயமாக்கல், பொருளாதாரம், காலநிலை மாற்றக் கொள்கைகளில் தாக்கத்தை நிவர்த்தி செய்ய Habitat-III 2016 அக்டோபர் மாதம் ஈக்வடாரின் குய்டோவில் நடந்தது.
‘உலகளாவிய தெற்கு’ என்று அழைக்கப்பட்ட இடத்தில் முதல்முறையாக மாநாடு நடந்தது. வாழ்விடம்-III மாநாட்டின் முடி வில், நிலையான நகரங்கள் மற்றும் அனைவருக்கும் மனிதக் குடியிருப்புகள் பற்றிய க்விட்டோ பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
(அடுத்த பகுதி நாளை வரும்)
போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும். |
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 22: கிராம வளர்ச்சி, சமூக மேம்பாடு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT