Published : 11 Jun 2022 08:17 AM
Last Updated : 11 Jun 2022 08:17 AM
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி.- 19 -
189 உறுப்பு நாடுகள், 170-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள், 130-க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் கொண்ட உலக வங்கி, தனித்துவமான கூட்டாண்மையாகும்.
வளரும் நாடுகளில் வறுமையைக் குறைப்பது உள்ளிட்ட தீர்வுகளுக்காக ஐபிஆர்டி, ஐடிஏ, ஐஎஃப்சி, எம்ஐஜிஏ, ஐசிஎஸ்ஐடி, ஐபிஆர்டி ஆகிய நிறுவனஙகள் செயல்படுகின்றன. இவை,வளரும் நாடுகளின் அரசாங்கங்களுக்கு நிதி, கொள்கை ஆலோசனை, தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் வகையில் உலக வங்கியை உருவாக்கியுள்ளன.
ஐடிஏ ஏழ்மையான நாடுகளின் மீது கவனம் செலுத்துகிறது, ஐபிஆர்டி நடுத்தர வருமானம் மற்றும்கடன் பெறக்கூடிய ஏழை நாடுகளுக்கு உதவுகிறது. ஐஎஃப்சி, எம்ஐஜிஏ, ஐசிஎஸ்ஐடி ஆகியவை வளரும் நாடுகளில் தனியார் துறையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
இந்த நிறுவனங்கள் மூலம், உலக வங்கி தனியார் நிறுவனங்களுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, அரசியல் இடர்க் காப்பீடு மற்றும்சர்ச்சைகளைத் தீர்ப்பது ஆகியவற்றில் உதவுகிறது.
சர்வதேச நாணய நிதியம்
1930-களின் மந்தநிலைக்குப் பிறகு, 1944-ல் சர்வதேச நாணய நிதியம் (IMF) நிறுவப்பட்டது. 44 உறுப்பு நாடுகள் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்க முயன்றன. இன்று 190 நாடுகள் அதில் இணைந்துள்ளன. நாடுகள் நிதிச் சிக்கலில் சிக்கும்போது, இது கடனுதவி வழங்குகிறது.
உலக வர்த்தக அமைப்பு
உலக வர்த்தக அமைப்பு (WTO) என்பது, நாடுகளுக்கிடையேயான வர்த்தக விதிகளைக் கையாளும் ஒரே உலகளாவிய சர்வதேச அமைப்பாகும். அதன் உடன்படிக்கைகளில் பெரும்பகுதி வர்த்தக நாடுகள் கையொப்பமிட்டு, அவற்றின் பாராளுமன்றங்களில் அங்கீகரித்துள்ளன. வர்த்தகம் முடிந்தவரை சீராகவும், கணிக்கக் கூடியதாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள்.
உலக வர்த்தகத்தில் 98 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு 160 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. Ngozi Okonjo-Iweala உலக வர்த்தக அமைப்பின் 7-வது இயக்குநர் ஜெனரல். டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார். அவரது பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் 31-ல் முடிவடைகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி
1966-ல் 31 உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 68 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி, வளமானமற்றும் நிலையான ஆசியா மற்றும் பசிபிக் பகுதியை உருவாக்க உறுதிபூண்டுள்ளது, அதே நேரத்தில், தீவிரவறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறது. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள், தொழில்நுட்ப உதவிகள், மானியங்கள் மற்றும் பங்கு முதலீடுகளை வழங்குவதன் மூலம், அதன் உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு உதவுகிறது.
உலகப் பொருளாதார மன்றம்
1971-ல் லாப நோக்கற்ற அறக்கட்டளையாக உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) நிறுவப்பட்டது. உலகளாவிய தொழில் துறை நிகழ்ச்சி நிரல்களை வடிவமைக்க, சமூகத்தின் முன்னணி அரசியல், வணிக, கலாச்சார மற்றும் பிற தலைவர்களை இம்மன்றம் ஈடுபடுத்துகிறது.
சர்வதேச நெறிமுறைகள்
மாண்ட்ரீல் நெறிமுறை என்பது, ஓசோன் அடுக்குகளை குறைக்கும் பொருட்கள் எனக் குறிப்பிடப்படும், மனிதனால் உருவாக்கப்பட்ட 100 ரசாயனங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுகளை ஒழுங்குபடுத்தும் முக்கிய சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும். 1987 செப்டம்பர் 15-ம் தேதி இதுஏற்றுக்கொள்ளப்பட்டது. 198 ஐ.நா.உறுப்பு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுவாகும்.
கியோட்டோ நெறிமுறை 1997 டிசம்பர் 11-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2005 பிப். 16-ல் நடைமுறைக்கு வந்தது. கியோட்டோ புரோட்டோகால் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டை நடத்துகிறது.
(அடுத்த பகுதி நாளை வரும்)
குறைந்தபட்ச தகுதி தரநிலை சிவில் சர்வீசஸ் தேர்வு 2021-ல், பல்வேறு நிலைகளில், பல்வேறு பிரிவுகளில் கடைசியாகப் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர் பெற்ற குறைந்தபட்ச தகுதித் தரநிலைகள் பின்வருமாறு: Preliminary Examination - General (87.54), EWS(80.14) OBC(84.85) SC(75.41) ST(70.71) Person with Benchmark Disability(PwBD)-1(68.02), PwBD-2(67.33), PwBD-3(43.09), PwBD-5(45.08) Mains Examination-General (745), EWS(713) OBC(707) SC(700) ST(700) Person with Benchmark Disability(PwBD)-1(668), PwBD-2(712), PwBD-3(388), PwBD-5(560). Final Result s(Mains Written and Interview) General (953), EWS(916) OBC(910) SC(886) ST(883) Person with Benchmark Disability(PwBD)-1(892), PwBD-2(932), PwBD-3(689), PwBD-5(701). |
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 18: விருப்ப பாடத்தை எப்படி தேர்வு செய்வது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT