Published : 24 Apr 2022 07:04 AM
Last Updated : 24 Apr 2022 07:04 AM

போட்டித்தேர்வு தொடர் 06: தகுதி நிலை - ஆளுமை அடையாளம்

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி.

- 6 -

மத்திய தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வும் ஒன்று. அதற்கான தேதி, ஆண்டு கால அட்டவணையின் அடிப்படையில் அறிவிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்புதான் இத்தேர்வை எழுதுவதற்கான அடிப்படை கல்வித் தகுதி.

இந்த தேர்வு 3 நிலைகளைக் கொண்டது.

1. முதல்நிலை தேர்வு

2. முதன்மைத் தேர்வு

3. நேர்காணல்

ஒவ்வொரு தேர்வுக்கும் கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் சாதி அடிப்படையில் தேர்வர்கள் தேர்வுசெய்யப்பட்டு அடுத்த நிலைக்குதகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

யுபிஎஸ்சியில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளதோ, அந்த விகிதாச்சாரத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் நிலையில் இருந்து முதன்மைத் தேர்வுக்கு 1:13 என்ற விகிதத்திலும், முதன்மைத் தேர்வில் இருந்து நேர்காணலுக்கு 1:3 என்ற விகிதத்திலும் தேர்வு நடத்தப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு

பொது அறிவு பாடப் பிரிவில் இருந்து 2010 முதல் 2020 வரை கீழ்வரும் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்திய அரசியலமைப்பு 11%, இந்திய பொருளாதாரம் 18%, இந்திய வரலாறு 21%, புவியியல் 24%, அறிவியல் 17%, இதர பகுதிகளான நடப்பு நிகழ்வுகள், சர்வதேச அமைப்புகள் 9%.

மொத்த வினாக்கள் 100,

மொத்த மதிப்பெண்கள் 200, அனுமதிக்கப்பட்ட நேரம் 2 மணி.

CSAT (Civil Service Aptitude Test)

புரிதல் 37%, குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட் 28%, தரவு விளக்கம் 8%, பகுத்தறிவு, பொது மனத்திறன் 27%

மொத்த வினாக்கள் 80. மொத்த மதிப்பெண்கள் 200. தேர்வு நேரம் 2 மணி நேரம். குறைந்தபட்ச தேர்ச்சி 33% மதிப்பெண்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1

இந்திய அரசியலமைப்பு 15%, இந்திய பொருளாதாரம் 9%, இந்திய வரலாறு 16%, புவியியல் 13%, அறிவியல் 27%, நடப்பு நிகழ்வுகள், தமிழ் இலக்கியம் 20% கொண்டதாக இருக்கும். இதில் மொத்த வினாக்கள் 200. மொத்த மதிப்பெண்கள் 300. அனுமதிக்கப்பட்ட நேரம் 2 மணி.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2

இந்திய அரசியலமைப்பு சட்டம் 13%, இந்திய பொருளாதாரம் 17%, இந்திய வரலாறு 19%, புவியியல் 15%, அறிவியல் 27%, நடப்பு நிகழ்வுகள், இதர பகுதிகள் 9% என ஒதுக்கப்படும்.

மொத்த வினாக்கள் 200. மொத்த மதிப்பெண்கள் 300. அனுமதிக்கப்பட்ட நேரம் 2 மணி நேரம். இதில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் வினாக்கள் 100 அடங்கியிருக்கும். பொது அறிவு வினாக்கள் 75, திறனறிவு வினாக்கள் 25 இத்தேர்வில் இடம்பெற்றிருக்கும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4

இந்திய அரசியலமைப்பு 17%, இந்திய பொருளாதாரம் 9%, இந்திய வரலாறு 24%, புவியியல் 19%, அறிவியல் 20%, நடப்பு நிகழ்வுகள் 11%

மொத்த வினாக்கள் 200. மொத்த மதிப்பெண்கள் 300. அனுமதிக்கப்பட்ட நேரம் 2 மணி. இதில் பொதுத் தமிழ் 100, பொது அறிவு வினாக்கள் 75, திறனறி வினாக்கள் 25 அடங்கியிருக்கும்.

(அடுத்த பகுதி வரும் சனிக்கிழமை)

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 05 - கஞ்சனைப் போல காலத்தை செலவழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x