பிப். 28: இன்று என்ன? - நவீன இலக்கிய எழுத்தாளர் தி.ஜா

பிப். 28: இன்று என்ன? - நவீன இலக்கிய எழுத்தாளர் தி.ஜா
Updated on
1 min read

சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர் தி.ஜானகிராமன். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் 1921 பிப்ரவரி 28-ம் தேதி பிறந்தார். உமையாள்புரம் சாமிநாதர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரத்திடம் இசை கற்றார்.

கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். ஐரோப்பிய இலக்கியங்கள் கற்றார். சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். டெல்லி வானொலி நிலையத்தில் உதவி தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

‘கணையாழி’ மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1964-ல்வெளியான இவரது ‘மோகமுள்’ நாவல், திரைப்படமாக தயாரிக்கப் பட்டது. ‘அமிர்தம்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘நளபாகம்’உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘அம்மா வந்தாள்’ நாவல் ஆங்கிலம்,குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

பல குறு நாவல்கள், ஏராளமானசிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். ‘மனிதாபிமானம்’, ‘சக்தி வைத்தியம்’, ‘யாதும் ஊரே’ உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இலக்கியம், இசை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட. ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in