பிப். 27: இன்று என்ன? - விஜய் சிங் பதிக்

பிப். 27: இன்று என்ன? - விஜய் சிங் பதிக்
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் விஜய் சிங் பதிக் உத்தரப்பிரதேசம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் 1882 பிப்ரவரி 27-ம் தேதி பிறந்தார். இவரது தாத்தாவும், அப்பாவும் 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தில் பங்கேற்றவர்கள். எனவே, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார்.

அவரிடம் ஜமீன்தார்களின் உதவியுடனும் பாதுகாப்புடனும் ஆங்கிலேயர்கள் வரி வசூலித்து வந்தனர். இதை எதிர்த்து ஒவ்வொரு கிராமத்திலும் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகளை தொடங்கினார். காந்தியடிகள் சத்தியாக்கிரகத்தைத் தொடங்குவதற்கு முன்னரே விவசாயிகளின் நலனுக்காக ‘பிஜவுலியா கிஸான் அந்தோலன்’ என்ற பெயரில் சத்தியாகிரக இயக்கத்தை நடத்தினார். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவரது பணிகளால், மகாத்மா காந்தி, லோகமான்ய திலகர் ஆகியோர் பெரிதும் கவரப்பட்டனர். ‘பதிக் ஒரு நல்ல சிப்பாயைப் போல பணியாற்றுபவர்’ என்று காந்தியடிகள் இவரைப் பாராட்டியுள்ளார்.

1920-ல் ராஜஸ்தான் சேவா சங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இது மக்கள் போராட்ட இயக்கங்களை முன்னின்று நடத்தியது. வளமான சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், ஆணும் பெண்ணும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார் விஜய் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in