பிப். 24: இன்று என்ன? - தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை

பிப். 24: இன்று என்ன? - தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை
Updated on
1 min read

தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் ஆர்.முத்தையா. இலங்கை யாழ்ப்பாணத்தில் 1886 பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார். 21 வயதில் ரயில்வேயில் வேலை கிடைத்தது. இந்த காலக்கட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து உள்ளிட்டவற்றை கற்றார். 1913-ல் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதினார். தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் அடக்குவது சவாலாக இருந்தது. பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனி விசைகளில் அமைத்தார்.

இரண்டு விசைகளை அழுத்திய பிறகே அச்சு நகர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ‘நகரா விசை’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார். அதற்கு ‘ஸ்டாண்டர்டு தட்டச்சு’ என பெயரிட்டார்.

ஆங்கிலத் தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துகள் கொண்ட தமிழ் மொழியை விசைகளுக்குள் அடக்கி தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார். இவரை பார்த்து பல மொழியினரும் தம்முடைய மொழிகளில் தட்டச்சு சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in