பிப்.23: இன்று என்ன? - டெல் நிறுவனத்தை உருவாக்கியவர்

பிப்.23: இன்று என்ன? - டெல் நிறுவனத்தை உருவாக்கியவர்
Updated on
1 min read

கம்ப்யூட்டர் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 1965 பிப்ரவரி 23-ம் தேதி பிறந்தார். சிறுவயதில் தபால் தலைகள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இதற்கு வரவேற்பு இருப்பதை அறிந்து, யாருடைய உதவியுமின்றி தானே விளம்பரம் கொடுத்து 10 வயதுக்குள் 2 ஆயிரம் டாலர் சம்பாதித்தார். தனது புது ஆப்பிள் கணினியை அக்கு வேறு, ஆணி வேறாக கழற்றி, பிறகு கச்சிதமாக பொருத்தி கணினி பற்றி கற்றுக்கொண்டார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையிலேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினார்.

கணினி உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்றார். அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார். 1987-ல் நிறுவனத்தின் பெயரை “டெல் கம்ப்யூட்டர் கார்ப்ப ரேஷன்”என மாற்றினார்.

1992-ல் ஃபார்ச்சூன் இதழின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. பட்டியலில் இடம்பெற்ற மிகவும் இளமையான தலைமை செயல் அதிகாரி இவர்தான். 1999-ல் டெல் நிறுவன உத்தி பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டார். மைக்கேல் சூஸன் அறக்கட்டளை மூலம் ஏழைகளின் கல்விக்கும், மருத்துவத்துக்கும் உதவி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in