பிப். 13: இன்று என்ன? - உலக வானொலி நாள்

பிப். 13: இன்று என்ன? - உலக வானொலி நாள்
Updated on
1 min read

தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.

வானொலியின் தந்தை என அழைக்கப்படுபவர் இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி. இவரால் 1888-ல் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி தொழில்நுட்பம், 1901-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவில் 1927-ல் மும்பை, மற்றும் கொல்கத்தாவில் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1936-ல் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ், நிறுவப்பட்டு பின்னர் தன்னாட்சி வழங்கப்பட்ட பிரசார் பாரதி அங்கமாக மாறியது.

ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட 16 அயல்நாட்டு மொழிகளிலும், 24 இந்திய மொழிகளிலும் 208 ஒலிபரப்பு நிலையங்களோடு அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐநா துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ஐ உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது. 1946-ல் ஐநா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in