

20-ம் நூற்றாண்டின் செல்வாக்குப் படைத்த எழுத்தாளர் ஜேம்ஸ் அகஸ்டின் அலோசியஸ் ஜாய்ஸ். அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ரத்கர் பகுதியில் 1882 பிப்ரவரி 2-ம் தேதி பிறந்தார்.
ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் நார்வே மொழிகளைப் பயின்றார். 1904-ல் இத்தாலியில் ட்ரியஸ்ட் நகரில் ஆங்கில ஆசிரியராகவும், 1906-ல் ரோம் நகரில் ஒரு வங்கியிலும் பணியாற்றினார். 1912-ல் ‘காஸ் ஃபிரம் ஏ பர்னர்’ என்ற கவிதை எழுதி வெளியிட்டு கிடைத்த பேரும் புகழினாலும் முழு நேர எழுத்தாளராக மாறினார்.
இவரின் பல படைப்புகள் சிறப்பாக இருந்த போதிலும் “ஏ போர்ட்ரெய்ட் ஆப் தி ஆர்டிஸ்ட் ஆஸ் ஏ யங் மேன்” என்ற உளவியல் புத்தகமே இவரது ஆகச்சிறந்த படைப்பாக வாசகர்களால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. அதற்கு அடிப்படை காரணம், ஜேம்ஸின் மகள் லூசியா அபாரமான நடனக் கலைஞராக இருந்தபோதே மனநோயால் பாதிக்கப்பட்டார்.
தனது இறுதி காலம்வரை தீவிர மனவியல் சிகிச்சைக்கு ஆளான தனது மகளை கண்டு மனம் வெம்பிய ஜேம்ஸிடமிருந்து காலத்தை வென்ற காவியம் பிறந்தது. பிறகு ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ஜேம்ஸ் பெயர் சூட்டப்பட்டது.