

எழுத்தாளர், விமர்சகர், 1995-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பிரபஞ்சன். இவர் 1945 ஏப்ரல் 27 புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை “என்ன உலகமடா” 1961-ல் வெளியானது. இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது சிறுகதைத் தொகுப்பான “நேற்று மனிதர்கள்” கல்லூரி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்”-க்காக தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு பரிசை பெற்ற பிரபஞ்சன் 2018 டிசம்பர் 21-ல் காலமானார்.