

மதராஸ் மாகாணத்தில் பட்டதாரியான முதல் இந்துப் பெண், சமூக சீர்திருத்தவாதி ஆர். எஸ். சுபலட்சுமி. சகோதரி சுபலட்சுமி என்றே அழைக்கப்பட்ட இவர் 1908-ல் மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
கல்வியும், மறுவாழ்வும் அளிக்க 1912-ல் இளம் வயதில் கணவனை இழந்தவர்களுக்கு ஸ்ரீ சாரதா ஐக்கிய சங்கம் எனும் அமைப்பைத் தொடங்கினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்த ஆசிரமத்தில் மருத்துவராகச் சேவையாற்றினார். 1922-ல் இந்த அமைப்புக்காக ஆங்கிலேய அரசு ரூ.2 லட்சம் செலவில் பள்ளிக்கூட வளாகத்தை கட்டிக் கொடுத்தது.
அதற்கு சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபுவின் மனைவி லேடி வெலிங்டன் பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேய அரசிடம் ‘கேசரி ஹிந்த்' பட்டம் பெற்ற சுபலட்சுமி 1969 டிசம்பர் 20-ல் காலமானார்.