டிச.19: இன்று என்ன? - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ

டிச.19: இன்று என்ன? - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ
Updated on
1 min read

தமிழ் உணர்வாளர், நீதிக்கட்சி உறுப்பினர் கி.ஆ.பெ விஸ்வநாதம். இவர் திருச்சியில் 1893-ல் பிறந்தார். 50 வயதில்தான் முதன்முதலில் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதப் பயின்றார்.

நாவலர் வேங்கடசாமி, மறைமலையடிகள், திரு. வி. க., நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்களை நேரில் சந்தித்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ் வளர்ச்சித் துறையால் நாட்டுடைமையாக்கப்பட்டது.

இதற்கு பரிசுத்தொகை ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் சார்பில், 2000 முதல் தமிழ்த் தொண்டாற்றுபவர்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. 1994 டிசம்பர் 19-ல் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in