டிச.16: இன்று என்ன? - பட்டதாரிகளுக்கு பாடம் ஆனவர்

டிச.16: இன்று என்ன? - பட்டதாரிகளுக்கு பாடம் ஆனவர்
Updated on
1 min read

‘சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி’ (Sense and Sensibility), பிரைடு அண்ட் பிரிஜுடைஸ் (Pride and Prejudice), மான்ஸ்பீல்டு பார்க் (Mansfield Park), உள்ளிட்ட நாவல்கள் மூலம் ஆங்கில இலக்கிய உலகில் அழியாப் புகழ்ப் பெற்றவர் ஜேன் ஆஸ்டின். பிரிட்டிஷ் பெண் எழுத்தாளரான இவர் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் 1775 டிசம்பர் 16-ல் பிறந்தார்.

இவரது எழுத்துகள் 18-ம்நூற்றாண்டில் பெண்கள் சமூகத்தில் முன்னேறத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டவை. பலமுறை தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் இவரது படைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளி படிப்பை தாண்ட முடியாத குடும்பச் சூழலில் வாழ்ந்த ஜேன் ஆஸ்டினின் படைப்புகள் பிற்காலத்தில் பல்வேறு நாடுகளில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in