

அமெரிக்கா சிகாகோ நகரத்தில் 1901-ல் பிறந்தார் வால்ட் டிஸ்னி. ஓவியங்களுக்கு உயிரூட்டும் அனிமேஷன் கலையைக் கற்றார். ரயில் பயணத்தின்போது அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த சுண்டெலியை தன்னுடைய கதாநாயகனாக்கினார்.
அப்படி உருவானதுதான் ‘மிக்கி மவுஸ்’. அந்த படத்துக்கு இசையமைக்கப் பணமின்றி தனது காரை விற்றார். 1932-ல் அந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. படங்களைத் தயாரிக்க சொந்தமாய் ஸ்டுடியோ நிறுவினார். மிக்கி, டொனால் டக் படங்களை வியாபாரிகள் உடைகளிலும், பொம்மை தயாரிப்பிலும் பயன்படுத்த அவரிடம் அனுமதி கோரினர்.
விற்பனை உரிமைகளை வழங்கியே கோடீஸ்வரர் ஆனார். ‘ஸ்லீப்பிங் ப்யூட்டி’, ‘சிண்ட்ரெல்லா’, ‘த ஜங்கிள் கேட்’ போன்ற காலத்தை வென்ற படங்களை தனது உழைப்பால் உருவாக்கிய டிஸ்னி 1966 டிசம்பர் 15-ல் காலமானார்.