Published : 13 Dec 2022 06:00 AM
Last Updated : 13 Dec 2022 06:00 AM

டிச.13: இன்று என்ன? - ரஷ்ய ஓவியர் கண்டீன்ஸ்கி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வசீலி கண்டீன்ஸ்கி (Wassily Kandinsky) 1866-ல் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான ஓவியரான இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டமும் பொருளியலும் பயின்றார்.

டார்பட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். தனது 30-வது வயதில் ஓவிய ஆராய்ச்சியில் இறங்கினார். சிறுவனாக இருந்தபோது, வண்ணங்கள் மீது வழக்கத்திற்கு மாறாக ஈர்க்கப்பட்டதாக நினைவுபடுத்திக் கொண்டார். இதை ஆன்மாவின் உள்ளு ணர்வு என்றார். 1896-ல்மியூனிக் நுண்கலைகள் அகாடமியில் கற்றார்.

1922 முதல் 1933 வரை ஓவியம் கற்பித்தார். 1889-ல் இனவரைவியல் ஆய்வுக்குழு உறுப்பினரானார். ஓவியத்தில் ஒளி, வெளிச்சம் பொருந்திய வண்ணங்களை அழகுற தீட்டுவதை தனது தனி முத்திரையாக வரித்துக் கொண்டார். 1944 டிசம்பர் 13-ல் தனது 77-வது வயதில் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x