

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினமாக டிசம்பர் 12-ஐ ஐ.நா. அறிவித்துள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2012 டிசம்பர் 12-ம் தேதி உலக சுகாதார பாதுகாப்பு தினம் அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலகளாவிய சுகாதார பாதுகாப்பு முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்தது. சமமான சுகாதார பாதுகாப்பு என்பது பெண்கள், குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை முதன்மைப்படுத்துகிறது, ஏனெனில் அவர்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்.