டிச. 08: இன்று என்ன? - தேஜ் பகதூர் சப்ரு

டிச. 08: இன்று என்ன? - தேஜ் பகதூர் சப்ரு
Updated on
1 min read

இந்திய சுதந்திர போராட்ட வீரர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர், அரசியல்வாதியுமானவர் தேஜ் பகதூர் சப்ரு. இவர் 1875 டிசம்பர் 8-ம் தேதி உத்தரபிரதேசதம் அலிகார் நகரில் பிறந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் லிபரல் கட்சியின் தலைவராக இருந்தார். 1927-ல் இந்திய அரசியலமைப்பை உருவாக்க இவர் ஒரு அனைத்து கட்சி மாநாட்டை ஏற்பாடு செய்தார். 1928-ல் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து நேரு குழு அறிக்கையை உருவாக்க உதவினார்.

அவரது பரிந்துரை இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக, கூட்டாட்சி அரசியலின் ஒரு பகுதியாக மாநிலங்களை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒன்றிணைக்க முன்மொழிந்தது இவரே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in