டிச. 01: இன்று என்ன? - நாகாலாந்து தனி மாநிலமானது

டிச. 01: இன்று என்ன? - நாகாலாந்து தனி மாநிலமானது
Updated on
1 min read

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது நாகாலாந்து மாநிலம். இதன் தலைநகரம் கோகிமா. நாகாலாந்து 16 நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் 16 முக்கிய இனக் குழுக்கள் வாழ்கின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மங்கொலாயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவர்.

நாகாலாந்து 1961-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. பழங்குடியின மக்களின் மொழியான நாகா மற்றும் பல்வேறு வட்டார மொழிகள் இங்கு பேசப்பட்டாலும் இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம். நாகாலாந்து பழங்குடி மக்களின் ஹார்ன்பில் விழா உலகப் பிரசித்தி பெற்றது. இம்மாநிலத்தின் பெயர் காதணிகளைக் கொண்ட மக்கள் என்ற அர்த்தம் கொண்ட பர்மிய சொல்லான ‘நாக’ அல்லது ‘நாகா’வில் இருந்து உருவானது எனச் சொல்லப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in