Published : 28 Nov 2022 06:00 AM
Last Updated : 28 Nov 2022 06:00 AM
19-ம் நூற்றாண்டில் சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து அவற்றை களையும் முயற்சிகளில் இறங்கியவர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான பள்ளியை முதன்முதலில் தொடங்கியவர் ஜோதிராவ் புலே. 1873-ல் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து “சத்யசோதக் சமாஜம்” தொடங்கினார். 1842-ல் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளிக்கூடத்தை நடத்தினார்.
கணவரை இழந்த பெண்களுக்கான இல்லத்தை 1863-ல் நிறுவினார். 1864-ல் நடைபெற்ற கைம்பெண் மறுமணத்தில் முக்கிய பங்கு ஜோதிராவ் புலேவினுடையது. 1882-ல்பெண் விடுதலைக்கு எதிரான கருத்தை பரப்புரை செய்யும் விதமாக வெளிவந்த புத்தகத்தை துணிந்து எதிர்த்தார். இந்திய சமூக சீர்திருத்தவாதிகளில் முன்னோடியான இவர் 1890 நவம்பர் 28-ல் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT