நவ.25: இன்று என்ன? - இலவச கல்வி அளித்த பிடல் காஸ்ட்ரோ

நவ.25: இன்று என்ன? - இலவச கல்வி அளித்த பிடல் காஸ்ட்ரோ
Updated on
1 min read

கல்லூரியில் பயிலும் போதே கம்யூனிச கட்சியில் இணைந்தவர். தனது பேச்சுத் திறமையால் மக்களைக் கவர்ந்தவர். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர் பிடல் காஸ்ட்ரோ.

எழுத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்து “தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்” என்றார். ஒரே ஆண்டில், கியூபாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 30-லிருந்து 98.2%-ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் இலவசக் கல்வி அளித்தார். கன்பூசியஸ் அமைதி விருதை 2014-ல் பெற்றார். உலகில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பு வகித்த பெருமைக்குரிய பிடல் காஸ்ட்ரோ 2016 நவம்பர் 25-ல் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in