Published : 24 Nov 2022 06:00 AM
Last Updated : 24 Nov 2022 06:00 AM

நவ.24: இன்று என்ன? - நாவலாசிரியை அருந்ததி ராய்

பிரபல நாவலாசிரியை, அரசியல் விமர்சகர், மனித உரிமை ஆர்வலர் அருந்ததி ராய். தனது முதல் நாவலான, “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” புத்தகத்துக்காக 1997-ல் புக்கர் பரிசு வென்றார். இப்புத்தகம் 40 மொழிகளில் வெளியானது. 1961 நவம்பர் 24-ம் தேதி மேகாலாயா மாநிலம் ஷில்லாங்கில் பிறந்தார்.

இவர் முதலில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிலும் சில திரைப்படங்களிலும் பணி புரிந்தார். 1999-ல் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு திட்டத்துக்கு எதிராகவும், அந்நிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார். இவரது ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முதுகலை ஆங்கிலம் பட்டப்படிப்பில் இடம்பெற்றது. 2004-ல் சிட்னி அமைதிப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x