

ஒன்பது வயதிலேயே கர்நாடக இசைக்கச்சேரியில் பாடி குழந்தை மேதை என பெயர்பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க ‘மிலே சுர் மேரா தும்ஹாரா' தேசபக்திப் பாடலில் இடம்பெற்ற தமிழ் வரிகளை பாடியவர் இவரே. 1971-ல் பத்மஸ்ரீ, 1991-ல் பத்மவிபூசண், 2005-ல் தமிழக அரசின் கந்தர்வ கான சாம்ராட், யுனெஸ்கோ அமைப்பின் மகாத்மா காந்தி வெள்ளிப் பதக்கம், பிரான்ஸ் நாட்டின் செவாலியர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் அலங்கரிக்கப்பட்டார்.
அவர் பெயரின் பொருளை குறிக்கும் விதத்தில், ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ பாடலை இசையமைப்பாளர் இளையராஜா கொடுத்துப் பாடவைத்த பிறகு பட்டிதொட்டி எங்கும் பாலமுரளிகிருஷ்ணா பிரசித்தி பெற்றார். 2016-ல் நவம்பர் 22-ம் நாள் சென்னையில் காலமானார்.