

இங்கிலாந்தில் 1936-ல் தொலைக்காட்சியில் கருப்பு, வெள்ளை ஒளிபரப்பு தொடங்கியது. 1953-ல் அமெரிக்கர்கள் தொலைக்காட்சியில் வண்ண ஒளிபரப்ப தொடங்கினார்கள். இந்தியாவில் 1989-ல் தூர்தர்ஷன் மத்திய நிகழ்ச்சி தயாரிப்பு மையம் டெல்லியில் நிறுவப்பட்டது.
அதன் பிறகு தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கி ‘பிரச்சார் பாரதி’ மசோதா 1990-ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 1996-ல்நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கின் விதிமுறைப்படி ஐநா சபை நவம்பர் 21-ம் தேதி உலகத் தொலைகாட்சி தினமாக அறிவித்தது.
ஒளி, ஒலியை ஒன்றாக இணைத்து காட்சிப்படுத்துவது தொலைக்காட்சி. ஆன்டெனாவில் தொடங்கி, கேபிள், டிஷ்ஷில் ஒளிபரப்பாகி இன்று இணையம் வரை தொலைக்காட்சி வளர்ந்துவிட்டது.