

உலகை அச்சுறுத்தும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், 2006-ல்நவம்பர் 14 அன்று உலக நீரிழிவு நாள் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியது. முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், சர்க்கரை வியாதியை சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப்பட்டிருந்தாலும் இதற்கு உறுதியான மருத்துவ சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டது. அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கருதப்பட்டது. விஞ்ஞானிகள் பிரட்ரிக் ஜி பெண்டிங்க், பெஸ்ட், மெக்லியோட் சேர்ந்து இன்சுலினை கண்டுபிடித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் பிரட்ரிக் என்பதால் அவர் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.