Published : 11 Nov 2022 06:01 AM
Last Updated : 11 Nov 2022 06:01 AM

நவ.11: இன்று என்ன? - தேசிய கல்வி நாள்

விடுதலை போராட்ட வீரர், பாரத ரத்னா விருதை மறுத்தவர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1888-ல் நவம்பர் 11-ம் தேதி பிறந்தார். யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் மேல்நிலைப் பள்ளி வாரியம் அவரது பதவிக்காலத்தில்தான் நிறுவப்பட்டது. பல கல்வி அமைப்புகள் இந்தியாவில் உருவாகக் காரணமாக இருந்த இவரை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்தநாளை ‘தேசிய கல்வி தினமாக' 2008-ல்மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.

ஆண்டுதோறும் இந்நாளில் கல்வி குறித்த கருப்பொருள் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் 2022-ம்ஆண்டின் கருப்பொருள் "பாடத்தை மாற்றுதல், கல்வியை மாற்றுதல்" . இது, கல்வி முறையைச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு கற்பித்தலை மாற்றுவதையும் வலியுறுத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x