Published : 03 Nov 2022 06:02 AM
Last Updated : 03 Nov 2022 06:02 AM
இந்தியாவை சேர்ந்த பொருளாதார அறிஞர், நோபல் பரிசாளர், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் அமர்த்திய சென். இவர், மேற்கு வங்கம் சாந்திநிகேதனில் 1933-ல்நவம்பர் 3-ம் தேதி பிறந்தார். வங்கப் பிரிவினை, பஞ்சம் ஆகியவற்றை தனிப்பட்ட பாதிப்பாக கருதாமல் பொருளாதார ஆய்வறிஞரின் கோணத்தில் ஆராய்ந்து புத்தகங்கள் எழுதினார். “கல்வியும் சுகாதாரமும் - கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள்" என்ற இவரது புத்தகத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஆய்வு செய்து, தமிழகம் கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்தின் பிரபல கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக கற்பித்து வருகிறார். இவரது நூல்கள் 30-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT