

கணினி நிரலாக்கம் (programming), எழுத்து, முதலீடு போன்ற பல்துறை வித்தகராக விளங்குபவர். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். போர்ப்ஸ் இதழின் பார்வையில் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். 2010-ல் எடுக்கப்பட்ட "வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன்" , பிபிசி தயாரித்த ஆவணப்படமான "தி வெர்ச்சுவல் ரெவல்யூஷன்" உட்பட பல ஆவணப்படங்களில் தோன்றியுள்ளார். அவர்தான் வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்). இவர் 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம்தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பிறந்தார்.