

ரயிலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அறிய ‘பிளாக் பாக்ஸ்' ரெக்கார்டர் கருவி பொருத்த வேண்டும் என்கிற ஆலோசனையை வழங்கியவர், கருவிழியை பரிசோதிக்க பயன்படும் ஆப்தால்மாஸ்கோப் கருவியைக் கண்டுபிடித்தவர், கலங்கரை விளக்கத்தின் மூலம் சமிஞ்சை எழுப்பலாம் என்பதை முன்மொழிந்தவர்களில் முன்னோடி. இப்படி பலவிதமாக அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் கணிப்பொறியின் தந்தை என்று அறியப்படும் சார்லஸ் பாபேஜ். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்கத்தில் கணிதவியலில் உயர்கல்வி பயின்று அதே பல்கலைக்கழகத்தின் கணிதத் துறைத் தலைவரானார். 1822-லேயே இன்றைய கணினியின் அடிப்படை மொழியை கண்டுபிடித்தார். அக்டோபர் 18, 1871-ம் ஆண்டு லண்டனில் மறைந்தார்.