

மாயவரத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கியதன் மூலம் தமிழகத்தில் பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கியவர் நகைச்சுவைக் கவிஞர், மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்த்திருத்தவாதி என பன்முக ஆளுமை கொண்டவர் வேதநாயகம் பிள்ளை. இவர் அக்டோபர் 11, 1826-ல் பிறந்தார். மாயூரம் மாவட்டத்தில் நீதிமன்ற மொழிபெயர்ப்பு பணியான முன்சீஃப் பணியில் 13 ஆண்டுகள் வேலை பார்த்ததாலேயே மாயூரம் வேதநாயகம் என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் மாயவரம், மயிலாடுதுறை என்றானது. தமிழின் முதல் புதினமான “பிரதாப முதலியார் சரித்திரம்” நூலைப் படைத்தவரும் இவரே. 1805 முதல் 1861 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து “சித்தாந்த சங்கிரகம்” என்ற நூலாக வெளியிட்டார்.